புதன், 7 நவம்பர், 2012

ஹெர்குலிஸ் பீதாம்பரம்


ஹெர்குலிஸ் பீதாம்பரம்

 

 

பீதாம்பரத்தின் பஜாஜ் சேடக் எங்கள் வீதியில் பேமஸ்..

ஸ்கூட்டரில் தனித்து போனால் யாருக்கும் லிப்ட் தருவார்..

புளிய மர ஊஞ்சலில் ஆடுவது போல பயண சுகம்…

”போச்சய்யா காசு” என்பதை வார்த்தைக்கு வார்த்தை உச்சரிப்பார்..

 

வாகன ஆவணங்களை

ஏதோ ஒன்றை மறப்பது அவருடைய சுபாவம்

மளிகைக் கடை வியாபாரம் என்பதால்

அந்த சொற்றொடர் ஒட்டிவிட்டது..

 

டவுனுக்கு வந்தால் கப்பம் கட்டி வருவதே அவர் வேலை..

கனவிலும் நனவிலும் குறட்டையிலும் ”போச்சய்யா காசு”

என்பதை அவர் பிள்ளைகளும் சொல்ல ஆரம்பித்து விட்டது..

 

அவர் அடிக்கடி சபிப்பது…

”இந்தப் பெட்ரோல்..டீசல் யாருக்கும் கிடைக்கக் கூடாதப்பா…”

”ஏண்ணா”

”இது கெடைக்கறதுனால தான.. நாம,

அதயும் இதயும் மறந்துட்டுப் போய்

போலீஸ் கிட்ட மாட்டிட்டு கப்பம் கட்டறம்..

இப்ப வண்டியில்லன்னு வை..

என்ன பண்ணுவம் பழையபடி சைக்கிள் மாட்டு வண்டி எடுப்பம்ல..”.

என்று சொல்லிவிட்டு

”போச்சய்யா காசு” என்கிறார்..

 

புற்று வளரும் வரை அவர் தியானித்தது

வீண் போகவில்லை..

வந்தாகி விட்டது பெரும் எரிபொருள் தட்டுப்பாடு..

ஊர் நாடு நகரமக்கள் எல்லோரும் பரண்களில் ஏறி

சைக்கிள் உதிரிகளை எடுத்து செப்பமிடத்துவங்குகிறார்கள்…

 

சேடக் பீதாம்பரம் தன்னுடைய சைக்கிளை சரிசெய்து விட்டார்…

வணக்கம்  சொன்ன நண்பர்கள் குழுவிடம்..

 ”போச்சய்யா காசு..”பாத்தியா என்கிறார்..

ஹெர்குலிஸ் பீதாம்பரம்னு பேரே வெச்சிடம்ணா..என்றோம்..

ஆச்சர்ப்பட்டவர் ”போச்சய்யா காசு” என்றார்…

 

சுங்கம், ஆல்டுல்ஸ், SIHS காலணி, சாலை வருவது

ஏதோ சைக்கிள் பேரணி மாதிரி எங்கும் சைக்கிள்கள்…

திருச்சி சாலைகள் முழுக்கவும்

புற்றீசல் போல் எங்கு காணிணும் சைக்கிள்கள் மயம்தான்

அவரோ ”போச்சய்யா காசு,.”சந்தோசம்..

 

 

பிரதான சாலையினை வெட்டி..மிதித்து

 அழுத்தித் திரும்பும் போது

அவ்விடத்தே காவலர்கள்

சைக்கிள்களை மடக்கிக் கொண்டிருக்கிறார்கள்…

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக